கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை வழக்கில், சாட்சி கூறியவர் கைது; போலீஸ் கமிஷனரிடம் மனைவி புகார்


கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை வழக்கில், சாட்சி கூறியவர் கைது; போலீஸ் கமிஷனரிடம் மனைவி புகார்
x

கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கொலை வழக்கில், சாட்சி கூறியவர் கைது செய்ததை கண்டித்து போலீஸ் கமிஷனரிடம் மனைவி புகார் அளித்துள்ளார்.

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா ராயணால் கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தவர் தீபக் ராயணால். கடந்த 4-ந்தேதி இவர், மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை ராயணால் கிராம பஞ்சாயத்தில் பெண் உறுப்பினராக உள்ள கங்கம்மாவின் கணவர் பசவராஜ் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் கொலை பற்றி பசவராஜ், பழைய உப்பள்ளி போலீசில் சாட்சி கூறியதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பசவராஜை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பசவராஜின் மனைவி கங்கம்மா, தார்வார் மாநகர போலீஸ் கமிஷனர் லாபுராமிடம் புகார் மனு அளித்தார்.

அந்த புகாரில், கொலை வழக்கில் சாட்சி கூறிய எனது கணவரை, பழைய உப்பள்ளி போலீசார் கைது செய்து அநியாயம் செய்கின்றனர். எனவே, எனது கணவரை விடுவித்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் லாபுராம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது.


Next Story