நடப்பு நிதிஆண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரிப்பு


நடப்பு நிதிஆண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரிப்பு
x

கோப்புப்படம்

நடப்பு நிதிஆண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வரியும், தனிநபர் வருமான வரியும் நேரடி வரிகள் எனப்படுகின்றன. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் 1-ந் ேததி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரையிலான முதலாவது 6 மாத காலத்தில், நேரடி வரிகள் மூலம் கிடைத்த வசூல் ரூ.8 லட்சத்து 98 ஆயிரம் கோடி அகும். இது, முந்தைய நிதிஆண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்ததை விட 23.8 சதவீதம் அதிகம்.

வரி செலுத்துவோருக்கு 'ரீபண்ட்' கொடுத்தது போக ரூ.7 லட்சத்து 45 ஆயிரம் கோடி நிகர வசூல் கிடைத்துள்ளது. இது, முந்தைய நிதிஆண்டின் நிகர வசூலை விட 16.3 சதவீதம் அதிகம். மொத்தத்தில், கார்ப்பரேட் வருமான வரி வசூல் 16.74 சதவீதமும், தனிநபர் வருமான வரி வசூல் 32.30 சதவீதமும் உயர்ந்துள்ளன.

நேரடி வரிகள் வசூலில் கிடைத்த தொகை, நடப்பு நிதிஆண்டின் நேரடி வரிகள் வசூலின் மதிப்பீட்டில் 52.46 சதவீதம் ஆகும். ''வரி வசூல்தான் ஒரு நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை சுட்டிக்காட்டுகிறது. தொழில் உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றில் ஏற்பட்ட மந்தநிலையையும் மீறி, இவ்வளவு அதிக வசூல் கிடைத்துள்ளது'' என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.


Next Story