2002 ஆம் ஆண்டு கூட்டுப் பலாத்காரம், கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 26 பேரை விடுவித்தது குஜராத் நீதிமன்றம்


2002 ஆம் ஆண்டு கூட்டுப் பலாத்காரம், கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 26 பேரை விடுவித்தது குஜராத் நீதிமன்றம்
x

2002 ஆம் ஆண்டு கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரையும் குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கோத்ரா,

2002 ஆம் ஆண்டு நடந்த வகுப்புவாத கலவரத்தின் போது கலோலில் நடந்த தனித்தனி சம்பவங்களில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்டோரை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 26 பேரையும் குஜராத்தில் உள்ள நீதிமன்றம் 20 ஆண்டுகள் பழமையான வழக்கில் ஆதாரம் இல்லாததால் விடுவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 39 நபர்களில், 13 பேர் வழக்கு நிலுவையில் இருந்தபோது இறந்துவிட்டனர். இதனால் அவர்கள் மீதான விசாரணை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஹலோல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி லீலாபாய் சுதாசமா, கொலை, கூட்டுப் பலாத்காரம் மற்றும் கலவரம் ஆகிய குற்றங்களுக்கான வழக்குகளில் இருந்து 26 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் 2002 ஆம் ஆண்டு சபர்மதி ரயில் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்ட நிலையில் , இதனை அடுத்து அம்மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக பரவலாக வன்முறைகள் அரங்கேறின. 2002 மார்ச் 1ம் தேதி கோத்ராவில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பன்ச் மஹால் மாவட்டத்தின் டிலோஸ் என்கிற கிராமத்தில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் சிறுபான்மையின சமூகத்தினரின் வீடுகளை வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து எரித்தது. இந்த விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். கலவரம் நிகழ்த்தப்பட்டு 20 மாதங்கள் கடந்த பிறகே குஜராத் காவல்துறை எஃப் ஐ ஆர் பதிவு செய்து. அதன் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story