குஜராத்: லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்


குஜராத்: லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 14 Sep 2022 10:41 AM GMT (Updated: 14 Sep 2022 10:41 AM GMT)

குஜராத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் ஒன்றின் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

ஏழாவது மாடியில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில், லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளுர் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்." என்று தெரிவித்துள்ளார்.




Next Story