உத்தரகாண்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குஜராத் முதல் மந்திரி இரங்கல்
பேருந்தில் பயணித்தவர்கள் குஜராத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
உத்தர்காஷி,
உத்தரகாண்டின் உத்தர்காஷி மாவட்டத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கங்னானி என்ற பகுதியருகே சென்றபோது திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. 50 மீட்டர் ஆழத்தில் பேருந்து விழுந்ததில் பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் படுகாயமடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணையில், பேருந்தில் பயணித்தவர்கள் குஜராத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. முறையான சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவுகளையும் மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், பேருந்து கவிழ்ந்தவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.