குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி


குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி
x

குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் வன்ஸ்டா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் படேல். பழங்குடியின தலைவரான இவர், குஜராத்தில் மத்திய அரசின், பார்-தாபி-நர்மதை நதி இணைப்பு திட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ. ஆனந்த படேல் நேற்றுமுன்தினம் மாலை காரில் ஒரு கூட்டத்துக்கு சென்றார். அப்போது போக்குவரத்து நெருக்கடியால் ஓரிடத்தில் கார் நின்றபோது, பா.ஜ.க. உள்ளூர் நிர்வாகியான பாபு அகிர் என்பவரும், அவரது ஆதரவாளர்கள் சுமார் 50 பேரும் காரை முற்றுகையிட்டனர். அவர்கள் எம்.எல்.ஏ.வை வெளியே வரச் சொன்னபோது அவர் மறுத்ததால், கார் கண்ணாடியை உடைத்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் எம்.எல்.ஏ. ஆனந்த் படேல் வலது கண்ணில் காயமடைந்தார்.

இதுதொடர்பாக எம்.எல்.ஏ.வின் புகாரின் பேரில் பா.ஜ.க. நிர்வாகி பாபு அகிர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கர்பா நடன நிகழ்ச்சியில் தன்னை புகழ்ந்து பாடல் ஒலிபரப்பப்பட்டதால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் தன்னை தாக்கியதாக புகாரில் எம்.எல்.ஏ. ஆனந்த் படேல் கூறியுள்ளார். குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வினரால் தாக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story