குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஹர்திக் படேலுக்கு எதிராக கைது வாரண்டு


குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஹர்திக் படேலுக்கு எதிராக கைது வாரண்டு
x

கோப்புப்படம்

குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஹர்திக் படேலுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் படிதார் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வந்தவர், ஹர்திக் படேல். பின்னர், காங்கிரசில் சேர்ந்த அவர், அதிலிருந்து விலகி, கடந்த நவம்பர் மாதம் பா.ஜனதாவில் சேர்ந்தார். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பு, சுரேந்திரநகர் மாவட்டம் ஹரிபார் கிராமத்தில் அவர் கூட்டம் நடத்த அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. ஆனால், நிபந்தனைகளை பின்பற்றாமல், அரசு உத்தரவை மீறியதாக அவர் மீது திரங்கத்ரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்த விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து, மாஜிஸ்திரேட் டி.டி.ஷா, ஹர்திக் படேலுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்துள்ளார்.


Next Story