10 முறை எம்எல்ஏவாக இருந்த மோகன்சிங் ராத்வா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்


10 முறை எம்எல்ஏவாக இருந்த மோகன்சிங் ராத்வா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்
x

குஜராத்தில் 10 முறை எம்எல்ஏவாக இருந்த மோகன்சிங் ராத்வா காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

ஆமதாபாத்,

குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. மோகன்சிங் ராத்வா என்பவர் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைந்தார். குஜராத் சட்டசபைக்கு வருகிற டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 10 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த சோட்டா உதய்பூர் தொகுதியை சேர்ந்த மோகன்சிங் ராத்வா, பாஜகவில் இணைந்துள்ளார். முன்னதாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடால் மோகன்சிங் காங்கிரசை விட்டு வெளியேற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக காந்தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து, பாஜகவின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், மோகன்சிங் ராத்வா தம்மை பாஜகவில் இணைத்து கொண்டார். ஏற்கனவே இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக தாம் இனி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என மோகன்சிங் ராத்வா தெரிவித்திருந்தார். தற்போதும் அந்த முடிவில் உறுதியாக உள்ள மோகன்சிங், தனது மகன் விரும்பியதால் தாம் பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story