குஜராத் தேர்தல்: 20 லட்சம் வேலை வாய்ப்புகள் ; 2036 ஆம் ஒலிம்பிக் போட்டி- பா.ஜ.க தேர்தல் அறிக்கை


குஜராத் தேர்தல்: 20 லட்சம் வேலை வாய்ப்புகள் ; 2036 ஆம் ஒலிம்பிக் போட்டி- பா.ஜ.க தேர்தல் அறிக்கை
x

2036 ஆம் ஆண்டு மாநிலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக 'குஜராத் ஒலிம்பிக் மிஷன்' தொடங்கப்படும்.

காந்திநகர்

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி காந்திநகரில் தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 2036 ஆம் ஆண்டு மாநிலத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக 'குஜராத் ஒலிம்பிக் மிஷன்' தொடங்கப்படும்.

* பயங்கரவாத அமைப்புகள் மற்றும் இந்திய எதிர்ப்பு சக்திகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் சிலீப்பர் செல்களை அடையாளம் காண ஒரு "தீவிரமயமாக்கல் எதிர்ப்பு செல்" உருவாக்கப்படும்.

* வக்பு வாரியத்தின் சொத்துக்கள் மற்றும் நிதிகளை ஆய்வு செய்யவும், மதரஸாக்களின் பாடத்திட்டம் குறித்து ஆய்வு நடத்தவும் ஒரு பணிக்குழு அமைக்கப்படும்.

* குஜராத் மத சுதந்திர (திருத்தம்) சட்டம், 2021 இன் கீழ் கட்டாய மதமாற்றங்களுக்கு நிதி அபராதத்துடன் கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படும்.

* பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் குஜராத் மீட்பு சட்டன் இயற்றப்படும்.

* குஜராத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்

* மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதாந்திர இலவச ஊட்டச்சத்துக்கள். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் இலவச பேருந்து பயணங்கள் வழங்கப்படும் என பா.ஜ.க வாக்குறுதி அளித்துள்ளது

* பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறந்த கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்படும்.

* 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும்.

* பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா (ஆயுஷ்மான் பாரத்) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும்.

* 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

என அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story