குஜராத் 3 ஆண்டுகளாக ஸ்டார்ட்அப் தரவரிசையில் முதல் இடம் வகிக்கிறது; முதல்-மந்திரி பேச்சு


குஜராத் 3 ஆண்டுகளாக ஸ்டார்ட்அப் தரவரிசையில் முதல் இடம் வகிக்கிறது; முதல்-மந்திரி பேச்சு
x

குஜராத் 3 ஆண்டுகளாக ஸ்டார்ட்அப் தரவரிசையில் முதல் இடம் வகிக்கிறது என்று முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் பேசியுள்ளார்.


காந்திநகர்,

நாடு முழுவதும் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்க கூடிய இரண்டு நாள் மாநாடு ஆமதாபாத் நகரில் உள்ள அறிவியல் நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

மத்திய மற்றும் மாநில அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைத்து உள்ளார். நாட்டில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு வசதி செய்து கொடுக்கும் முயற்சியில் முதல் முறையாக இத்தகைய மாநாடு நடைபெறுகிறது.

இந்த வகையில், முதலாம் மாநாட்டில் குஜராத் முதல்-மந்திரி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை மந்திரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரிகள், செயலாளர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில் முனைவோர், அரசு சாரா அமைப்புகள், இளம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல், மாநிலத்தில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான சுற்றுக்சூழலை இளைஞர்களுக்காக மாநில அரசு உருவாக்கி வருகிறது.

நம்முடைய இரட்டை என்ஜின் அரசில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் ஆகியவையும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக ஸ்டார்ட்அப் தரவரிசையில் குஜராத் முதல் இடம் வகிக்கிறது என்று அவர் பேசியுள்ளார்.


Next Story