இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கும் 'நகர்ப்புற நக்சல்களை' குஜராத் அனுமதிக்காது - பிரதமர் மோடி பேச்சு


இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கும் நகர்ப்புற நக்சல்களை குஜராத் அனுமதிக்காது - பிரதமர் மோடி பேச்சு
x

இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கும் 'நகர்ப்புற நக்சல்களை' குஜராத் ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பரூச்,

குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பரூச்சில் அமைய உள்ள நாட்டின் முதல் மொத்த மருந்துப்பொருள் பூங்காவிற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

அதன்பின், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, " பரூச் ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கும் தாயகமாக இருக்கும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். குஜராத்தில் இருந்து ஏற்றுமதியை அதிகரிப்பதில் இந்த விமான நிலையம் முக்கிய பங்கு வகிக்கும்.

நகர்ப்புற நக்சல்கள் புதிய தோற்றத்துடன் மாநிலத்திற்குள்(குஜராத்) நுழைய முயற்சிக்கிறார்கள், அவர்கள் தங்கள் உடைகளை மாற்றியுள்ளனர். அவர்கள் நம்முடைய அப்பாவி மற்றும் ஆற்றல் மிக்க இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.

நகர்ப்புற நக்சல்கள் மேலிருந்து கால் பதிக்க பார்க்கிறார்கள். நம்முடைய இளம் தலைமுறையை அழிக்க விடமாட்டோம். நாட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகர்ப்புற நக்சல்களுக்கு எதிராக நமது குழந்தைகளை எச்சரிக்க வேண்டும்.

அவர்கள் அந்நிய சக்திகளின் முகவர்கள். அவர்களுக்கு எதிராக குஜராத் ஒருபோதும் தலை குனியாது, குஜராத் அவர்களை அழித்துவிடும். நான் பிரதமராகப் பதவியேற்ற 2014-ம் ஆண்டில் உலக அளவில் 10-வது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம், தற்போது ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது." இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story