பாதயாத்திரை பற்றி பா.ஜனதா பொய் பரப்புகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு


பாதயாத்திரை பற்றி பா.ஜனதா பொய் பரப்புகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

பாதயாத்திரை பற்றி பா.ஜனதா பொய் பரப்புவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி 'பாரத் ஜோடோ யாத்ரா' (இந்திய ஒற்றுமை யாத்திரை) என்ற பெயரில் கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார்.

இந்த பாதயாத்திரை 3,570 கி.மீ. தொலைவிலானது. இது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களைக் கடந்து தலைநகர் டெல்லிக்கு சென்றடைந்துள்ளது.

இந்நிலையில் பாதயாத்திரை பற்றி பா.ஜனதா பொய் பரப்புவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் ஆகியோர் டெல்லியில் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

காங்கிரசின் பாதயாத்திரை பற்றி பொய் பரப்புவதிலும், களங்கப்படுத்துவதிலும் பா.ஜனதா தீவிரமாக இருக்கிறது. பா.ஜனதா தலைவர்களும், அதன் தகவல் தொழில்நுட்ப பிரிவும் பொய்களை பரப்பும் நிைலயில், சில செய்தி சேனல்கள் இந்த பொய்களை ஊக்குவிக்கிறார்கள்.

பாதயாத்திரை குறித்து பா.ஜனதா 9 பொய்களை பரப்பியது. அனைத்து பொய்களும் அம்பலப்படுத்தப்பட்டு விட்டன என்று அவர்கள் கூறினர்.


Next Story