கொடூரத்தின் உச்சம்: 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, அரைநிர்வாண நிலையில் உதவி கேட்ட சிறுமியை விரட்டியடித்த நபர்


கொடூரத்தின் உச்சம்: 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, அரைநிர்வாண நிலையில் உதவி கேட்ட சிறுமியை விரட்டியடித்த நபர்
x

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அரைநிர்வாணமாக அந்த சிறுமி ஒரு வீட்டில் உதவி கேட்டுள்ளார். வீட்டு வாசலில் நின்ற நபர் விரட்டியடித்துள்ளார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டம் தண்டி அஷ்ரம் பகுதியில் நேற்று முன்தினம் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியை குற்றவாளி ஆள்நடமாட்டமற்ற பகுதியில் விட்டு சென்றுள்ளான். மேலும், சிறுமியின் மேல் ஆடையை கிழித்து அரைநிர்வாணமாக விட்டு சென்றுள்ளான். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமிக்கு ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி அரைநிர்வாணமாக, ரத்தம் சொட்ட சொட்ட அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு உதவி கேட்டு நடந்து வந்துள்ளார்.

அப்போது குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் வீட்டின் உரிமையாளர் நின்றுகொண்டிருந்தார். அரைநிர்வாணமாக, ரத்த போக்கு நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி அந்த நபரிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், அந்த நபரோ சிறுமியை இங்கிருந்து செல்லுமாறு விரட்டியடித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவி செய்யாமல் அவரை விரட்டியடித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி வேறு சிலரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தான் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை சிறுமியால் சரிவர கூறமுடியவில்லை எனவும், சிறுமியின் பேச்சை கேட்கும்போது அவர் உத்தரபிரதேசத்தின் பிரக்யாக்ராஜ் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி உதவி கேட்டும் வீட்டில் இருந்த நபர் உதவி செய்யாமல் விரட்டியடித்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story