ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு


ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு
x

தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் இயக்குனர் ஆகிய இருவருக்கு எதிராகவும் மரணம் விளைவிக்கும் குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹாபூர் மாவட்டம் டோலானா பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் நேற்று பிற்பகலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென அங்கிருந்த பாய்லர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் 3 மணி நேரம் போராடி தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைத்தனர்.

இருப்பினும் பாய்லர் வெடித்ததில் உடல் கருகி நேற்று 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் தடயவியல் அறிக்கை கிடைத்த பிறகே தெரிய வரும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் இயக்குனர் ஆகிய இருவருக்கு எதிராகவும் மரணம் விளைவிக்கும் குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story