அரியானாவில் அடுத்தடுத்து துணிகரம்: வீடு புகுந்து கொள்ளை, 3 பெண்களை கட்டி போட்டு பலாத்காரம்


அரியானாவில் அடுத்தடுத்து துணிகரம்:  வீடு புகுந்து கொள்ளை, 3 பெண்களை கட்டி போட்டு பலாத்காரம்
x

அரியானாவில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடு, வீடாக புகுந்து நகை, பணம் கொள்ளையடித்து விட்டு பெண்களை கட்டி போட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளது.

பானிபட்,

அரியானாவின் பானிபட் நகரில் நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் திடீரென வீடு ஒன்றிற்குள் புகுந்துள்ளது. வீட்டில் இருந்த 3 பெண்களை கயிறுகளை கொண்டு கட்டி போட்டனர். பணம், நகை உள்ளிட்டவற்றை அந்த கும்பல் கொள்ளையடித்து உள்ளது.

இதன்பின்னர் குடும்பத்தினரின் முன், ஆயுதங்களை காட்டி மிரட்டி, அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடி உள்ளது.

அந்த இரவில், சம்பவ பகுதியில் இருந்து 1 கி.மீ. தொலைவில் மற்றொரு சம்பவம் நடந்தது. இதில், மற்றொரு வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று, தம்பதியை அடித்து, தாக்கி உள்ளது. இதில், மனைவி உயிரிழந்து விட்டார். கணவரிடம் இருந்த பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறித்து கொண்டு கும்பல் தப்பி சென்றது.

இந்த இரண்டு சம்பவத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். ஒரே கிராமத்தில் சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பானிபட் நகரின் மத்லவுடா காவல் நிலைய உயரதிகாரி விஜய் கூறியுள்ளார்.


Next Story