மின் திருட்டு விவகாரம்: அபராதம் செலுத்தி விட்டேன் - குமாரசாமி


மின் திருட்டு விவகாரம்: அபராதம் செலுத்தி விட்டேன் - குமாரசாமி
x

மின் திருட்டு நடந்துள்ளது பற்றி தனக்கு தெரியாது.

பெங்களூரு,

கர்நாடகாவில் பெங்களூரின் ஜெ.பி நகரில் முன்னாள் முதல்-மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி இல்லத்தில் தீபாவளி பண்டிகையை விமரிசையாக கொண்டாடும் வகையில் அவரது இல்லம் மின்சார வெளிச்சத்தில் ஜொலிக்கும்படி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மின்சாரத்தை அருகிலுள்ள மின்கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக எடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பெங்களூரு மின் வினியோக நிறுவனம் பார்வையிட்டு விசாரணை நடத்தி குமாரசாமி மீது மின் திருட்டு வழக்கு பதிவு செய்தது. போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக குமாரசாமி அளித்துள்ள விளக்கத்தில்,

மின் திருட்டு நடந்துள்ளது பற்றி தனக்கு தெரியாது. மின் அலங்காரம் அமைக்கும் பொறுப்பு ஒப்பந்தகாரரிடம் ஒப்படைப்பட்டிருந்தது. அவர் தான் இந்தச்செயலில் ஈடுபட்டுள்ளது எனது கவனத்திற்கு தெரியவந்தது. ஒப்பந்தகாரர் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மின் வினியோக நிறுவனத்திற்கு ரூ. 68 ஆயிரத்து 526 ஐ அபராதமாக செலுத்தியுள்ளேன் என்றார்.


Next Story