என் பென்சில் பாக்ஸை உடைச்சிட்டான்... அவனுக்கு டிசி கொடுங்க... - தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்த 1-ம் வகுப்பு மாணவன்


என் பென்சில் பாக்ஸை உடைச்சிட்டான்... அவனுக்கு டிசி கொடுங்க... - தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்த 1-ம் வகுப்பு மாணவன்
x

கேரளாவில் தனது பென்சில் பாக்ஸை உடைத்த நண்பனுக்கு டிசி கொடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் 1-ம் வகுப்பு மாணவன் கோரிக்கை வைத்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

காசர்கோடு,

கேரளாவில் தனது பென்சில் பாக்ஸை உடைத்த நண்பனுக்கு டிசி கொடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் ஒன்றாம் வகுப்பு மாணவன் கோரிக்கை வைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காசர்கோடில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தியான் சங்கர். இந்த மாணவர் தலைமை ஆசிரியரை சந்தித்து தனது நண்பன் பென்சில் பாக்ஸை உடைத்ததாகவும், அவனுக்கு டிசி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு தலைமையாசிரியர், டிசி கொடுத்தால் அந்த மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என கூறியுள்ளார். இதற்கு யோசித்து பதில் சொல்வதாகக் கூறிய தியான் சங்கர், தனது நண்பருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுப்பதாகவும் கூறி உள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story