அரியானாவில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மிதந்துசெல்லும் வாகனங்கள்


அரியானாவில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மிதந்துசெல்லும் வாகனங்கள்
x

அரியானாவில் பெய்துவரும் கனமழை காரணமாக குருகிராம் நகரில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குருகிராம்,

அரியானா மாநிலம் குருகிராம் மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. தெருக்கள், சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். கனமழை காரணமாக குருகிராம் நகரில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story