கனமழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை


கனமழை எதிரொலி: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
x

கோப்புப்படம்

கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், நேற்று மற்றும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் நாளை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.


Next Story