கனமழை எதிரொலி: மாஹேவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


கனமழை எதிரொலி: மாஹேவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 23 July 2023 5:01 PM GMT (Updated: 23 July 2023 5:16 PM GMT)

தொடர் கனமழை காரணமாக நாளை மாஹேவில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 29ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நாளை மாஹேவில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட நிர்வாகி சிவராஜ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை மேலும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story
  • chat