அசாமில் கனமழை; சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
திஸ்பூர்,
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் கவுகாத்தி, திமாஜி, திப்ருகார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள சாலைகளில் மழை வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
திமாஜி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அங்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதே போல் விவசாய நிலங்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், பயிர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story