மராட்டியத்தில் கனமழை; மும்பையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
மராட்டியத்தின் மும்பை நகரில் கனமழையை முன்னிட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
டெல்லி, இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மும்பை பெருமாநகராட்சி வெளியிட்ட செய்தியில், கனமழையை முன்னிட்டு ஜூலை 27-ந்தேதி (இன்று) மும்பை நகரம் மற்றும் புறநகர பகுதிகளை சேர்ந்த அனைத்து மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் முதன்மை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுகிறது.
இதேபோன்று அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்து உள்ளது. கடந்த 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் மும்பையில் மித முதல் கனமழை பெய்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story