புனித யாத்திரை தொடங்க உள்ள நிலையில் கேதர்நாத்தில் கடும் பனிப்பொழிவு


புனித யாத்திரை தொடங்க உள்ள நிலையில் கேதர்நாத்தில் கடும் பனிப்பொழிவு
x

கேதர்நாத் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரைப் பயணம் இந்த மாதம் தொடங்குகிறது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் கோவில்கள் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

இந்த ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களுக்கான யாத்திரை தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 25-ந்தேதி கேதர்நாத் கோவில் யாத்திரையும், ஏப்ரல் 27-ந்தேதி பத்ரிநாத் கோவில் யாத்திரையும் தொடங்குகிறது.

இந்த நிலையில் கேதர்நாத் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. யாத்திரை செல்லும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கும் இடங்களில் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனிடையே யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக பாதைகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.


Next Story