ஈஷா மையத்தில் புதிய பணிகளை மேற்கொள்ள தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


ஈஷா மையத்தில் புதிய பணிகளை மேற்கொள்ள தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:45 PM GMT)

ஈஷா மையத்தில் புதிய பணிகளை மேற்கொள்ள தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

ஈஷா அறக்கட்டளை சார்பில் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் நந்திமலை அருகே யோகா மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் 112 அடி உயர பிரமாண்டமான ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலை திறப்பு விழா வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில், ஈஷா மையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், நந்திமலை அருகில் அமைந்துள்ள ஈஷா மையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், அதனால் அங்கு வணிக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அதனால் அவற்றுக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு, ஈஷா மைய விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஈஷா மையத்தில் மேற்கொண்டு புதிய பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story