இமாசல பிரதேச சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி


இமாசல பிரதேச சட்டசபை தேர்தல்:  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி
x

இமாசல பிரதேசத்தில் நடப்பு ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த முதல் கட்சி என்ற பெருமையை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.



சிம்லா,


இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. 68 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டு உள்ளது.

இதன்படி, பதேபூர், நக்ரோட்டா பக்வான், பாவோன்டா சாகிப் மற்றும் லஹால்-ஸ்பிடி ஆகிய 4 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்து உள்ளது.

வேட்பாளர்களாக முன்னாள் எம்.பி. ராஜன் சுசாந்த் (பதேபூர்), மணீஷ் தாக்குர் (பாவோன்டா சாகிப்), உமாகாந்த் தோக்ரா (நக்ரோட்டா பக்வான்) மற்றும் சுதர்ஷன் ஜஸ்பா (லஹால்-ஸ்பிடி) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இமாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த முதல் கட்சி என்ற பெருமையை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.


Next Story