இமாசல பிரதேசம்; 1.5 மணிநேரம் நடுவழியில் நின்ற கேபிள் கார்... திக் திக் நிமிடங்கள்
இமாசல பிரதேசத்தில் 2 முதியவர்கள் உள்பட 11 சுற்றுலாவாசிகளுடன் சென்ற கேபிள் கார் நடுவழியில் ஒன்றரை மணிநேரம் நின்றது.
சிம்லா,
இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று பர்வானூ. இந்நகரில் உள்ள டிம்பர் டிரெயில் பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுற்றுலாவாசிகள் செல்வதற்கு வசதியாக கேபிள் கார் சேவை செயல்படுகிறது.
இதில், 2 முதியவர்கள், 4 பெண்கள் உள்பட மொத்தம் 11 சுற்றுலாவாசிகள் சென்ற கேபிள் கார் திடீரென பல நூறு அடி உயரத்தில் நடுவழியில் நின்றது. இதுபற்றி பர்வானூ துணை போலீஸ் சூப்பிரெண்டு பிரணவ் சவுகான் கூறும்போது, கேபிள் காரில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் நடுவழியில் ஒன்றரை மணிநேரம் நின்று விட்டது.
அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என கூறியுள்ளார். இதன்படி, கயிறு கட்டி கேபிள் காரில் இருந்து ஒவ்வொருவராக கீழே இறக்கி கொண்டு வரப்படுகின்றனர்.
Related Tags :
Next Story