இன்னும் எத்தனை காலத்திற்கு இந்து சமூகம் மீது தாக்குதல் நடத்துவீர்கள்? - மம்தா பானர்ஜிக்கு ஸ்மிருதி இரானி கேள்வி


இன்னும் எத்தனை காலத்திற்கு இந்து சமூகம் மீது தாக்குதல் நடத்துவீர்கள்? - மம்தா பானர்ஜிக்கு ஸ்மிருதி இரானி கேள்வி
x

ராம நவமி பேரணி வன்முறையின் போது கல் எறிந்தவர்களை மம்தா பானர்ஜி பாதுகாக்கிறார் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ராம நவமியின் போது நடைபெற்ற ஊர்வலத்தில் இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இந்நிலையில் ராம நவமி பேரணியின் போது ஏற்பட்ட கலவரம் குறித்து பேசிய மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, நீதி வழங்க வேண்டிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு கல் எறிந்தவர்களை பாதுகாப்பதாக குற்றம்சாட்டினார்.

இன்னும் எத்தனை காலத்திற்கு இந்து சமூகம் மீது தாக்குதல் நடத்துவீர்கள்? என மம்தா பானர்ஜிக்கு கேள்வி எழுப்பியுள்ள ஸ்மிருதி இரானி கேள்வி, இது மம்தா பானர்ஜி ஆட்சியில் முதல்முறையாக நடந்த நிகழ்வு அல்ல என்று கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற லட்சுமி பூஜையின்போதும் பட்டியலினத்தவர்கள் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அந்த நேரத்திலும் மம்தா மவுனம் காத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story