காங்கிரசில் இணைந்த ஐதராபாத் மேயர்


காங்கிரசில் இணைந்த ஐதராபாத் மேயர்
x

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரசில் இணைந்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மேயர் கட்வால் விஜயலட்சுமி. பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்தவர். இவர் நேற்று திடீரென அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தஸ்முஷி ஆகியோர் முன்னிலையில் விஜயலட்சுமி தன்னை அக்கட்சியில் இணைத்து கொண்டார். விஜயலட்சுமியுடன் அவரது சகோதரர் வெங்கட்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதனிடையே விஜயலட்சுமியின் தந்தையும், பாரதீய ராஷ்டிர சமிதி கட்சி பொதுச்செயலாளருமான கே.கேசவ ராவ், பாரதீய ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ. கடியம் ஸ்ரீஹரி, அவரது மகள் காவ்யா ஆகியோர் பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் விரைவில் காங்கிரசில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவ்யாவை வாரங்கல் மக்களவை தொகுதியின் வேட்பாளராக பாரதீய ராஷ்டிர சமிதி நிறுத்திய நிலையில் அவர் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story