நான் இங்கிலாந்து ராணி ஆனால்... ராகுல் காந்தி பிரதமர் ஆவார்; சாட்ஜிபிடி பதில்


நான் இங்கிலாந்து ராணி ஆனால்... ராகுல் காந்தி பிரதமர் ஆவார்; சாட்ஜிபிடி பதில்
x

நான் இங்கிலாந்து நாட்டின் ராணியாக ஆனால், ராகுல் காந்தி இந்திய பிரதமர் ஆவார் என சாட்ஜிபிடி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்திய அரசியலில் முக்கிய தேசிய கட்சியாக காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. அக்கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. இந்திய அரசியலில் எதிர்க்கட்சியின் முக்கிய ஆளுமையான நபர்களில் ஒருவராக காணப்படும் அவர் ஒருபோதும், இந்திய பிரதமர் ஆக முடியாது என்ற வகையில் செயற்கை தொழில் நுட்பம் அடிப்படையில் உருவான சாட்ஜிபிடி தெரிவித்து உள்ளது.

சாட்ஜிபிடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங்ஏஐ என இரண்டும் ஓபன்ஏஐயின் ஜிபிடி தொழில் நுட்ப அம்சங்களை கொண்டு செயல்படுகிறது.

இதனை மேம்படுத்திய நபர்கள் ஒரு சார்பிலான முறையில், பாரபட்ச நோக்குடன் உருவாக்கி உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டே, இந்திய அரசியல் மற்றும் இந்திய புவிஅரசியல் நிலைமைகள் சார்ந்த கேள்விகளை, சாட்ஜிபிடி மற்றும் பிங் ஆகியவற்றிடம் கேட்க முடிவானது.

இதன்படி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் பிரபல நபரான ராகுல் காந்தி, ஆட்சி அதிகாரத்திற்கு வர கூடிய வாய்ப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என சாட்ஜிபிடியிடம் கேட்கப்பட்டது.

நேரடியாக கூறுவதென்றால், ராகுல் காந்தி இந்திய பிரதமராவாரா? என்பதே அந்த கேள்வி. இதற்கு சாட்ஜிபிடி, ரொம்ப நுணுக்கத்துடன் கூடிய, விரிவான பதிலை அளித்தது.

வருங்காலம் பற்றியும் நிச்சய தன்மையுடனான அரசியல் நிலை பற்றியும் கணிப்பது கடினம் என கூறி, அதனால், என்னால் இந்திய பிரதமராக ராகுல் காந்தி ஆவாரா? என்பதற்கு உறுதியான பதிலை தர முடியாது என கூறியது.

எனினும், பிரபல இந்திய அரசியல்வாதி, 2004-ம் ஆண்டில் இருந்து எம்.பி., துணை தலைவர் பதவி உள்பட பல கட்சி பதவிகளை வகித்து உள்ளார்.

எனினும், அவரது அரசியல் வாழ்க்கை வெற்றி, தோல்விகளை கொண்டுள்ளது. தலைமைத்துவம் மற்றும் தொடர்பு கொள்ளும் திறன்களுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்.

இந்திய பிரதமராவதற்கு பல காரணிகள் உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.விடம் 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் பெரிய தோல்வியை சந்தித்தது. அதனால், ஒரு வலுவான அரசியல் அடித்தளம் அமைத்து பல மாற்றங்களை செய்வதன் அடிப்படையிலேயே அவருக்கான பலன்கள் அமையும் என தெரிவித்தது.

இதனால், எதிர்பார்த்ததுபோலவே, இந்த பதிலானது முன்பே கூறியது போன்று மிக நுணுக்கமுடன் மற்றும் நன்றாக உணர்வுகளை வெளிப்படுத்த கூடிய வகையில் உள்ளது என கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விசயம், பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடி ஆகியவற்றை பதிலில் கூறியுள்ளது.

இறுதியாக, அரசியல் ரீதியாக சரியான பதிலை அளித்த போதிலும், ராகுல் காந்தி தேர்வாவதற்கான சாத்தியம் உள்ளது என்பதுபோல் கூறுகிறது.

ஆனால், உண்மை என்ன? அதனால், வெளிப்படையாக பதிலளிக்கும்படி சாட்ஜிபிடியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலாக, ஓ, அப்படியானால், ராகுல் காந்தி இந்திய பிரதமராவதற்கான வாய்ப்புகள் என்பது, நான் இங்கிலாந்து ராணியாவதற்கான நல்ல வாய்ப்புகள் இருப்பது போன்றது. அது என்னவென்றால், வாய்ப்பு இல்லை என்பதே. ஒருவேளை வேற்று கிரகவாசிகள் வந்து, அவரை ஆட்சியில் அமர்த்தலாம். யாருக்கு தெரியும்? என தெரிவித்து உள்ளது.

அதனால், சாட்ஜிபிடி மற்றும் அது சார்ந்த பல்வேறு தொழில் நுட்ப செயலிகளும், உண்மையை கூறுவது போன்று தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.


Next Story