குழந்தைகள் வேண்டும்... ஆனால் - திருமணம் குறித்த கேள்விக்கு ராகுல்காந்தி ருசிகர பதில்
இப்போது வரை திருமணம் ஏன் செய்துகொள்ளவில்லை என்று ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
டெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான சமீபத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை நிறைவு செய்தார். இந்நிலையில், இத்தாலி நாட்டு செய்தித்தாள் நிறுவனமான கொரிரி டிலா சிராவுக்கு ராகுல்காந்தி பேட்டி அளித்தார்.
அப்போது, இப்போது வரை திருமணம் ஏன் செய்துகொள்ளவில்லை என்று ராகுல்காந்தியிடம் நேர்காணல் செய்யும் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
திருமணம் குறித்த கேள்விக்கு ராகுல்காந்தி அளித்த பதில்,
இது வினோதமானது... எனக்கே தெரியவில்லை. செய்ய நிறைய விஷயங்களுள்ளது. ஆனால், நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்றார்.
பாரத் ஜோடோ யாத்திரையில் தாடியை ஷேவ் செய்யாதது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, ஜோடோ யாத்திரை முடியும்வரை தாடியை ஷேவ் செய்யப்போவதில்லை முடிவு செய்தேன். தற்போது தாடியை அப்படியே வைப்பதா அல்லது எடுத்துவிடுவதா என இனி முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
மேலும், தனது பாட்டி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, எனது இந்திய பாட்டிக்கு (இந்திராகாந்தி) என்னை அதிகம் பிடிக்கும். பிரியங்கா காந்தியை என் இத்தாலிய பாட்டிக்கு (மெலொ மெய்னொ) அதிகம் பிடிக்கும்' என்றார்.