ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற கற்று கொள்ள வேண்டும்: துணை ஜனாதிபதி அறிவுரை


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற கற்று கொள்ள வேண்டும்:  துணை ஜனாதிபதி அறிவுரை
x

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற கற்று கொள்ள வேண்டும் என துணை ஜனாதிபதி அறிவுரை கூறியுள்ளார்.



புதுடெல்லி,


இந்தியாவின் பல்வேறு அமைச்சகங்களில் உதவி செயலாளர்களாக 2020-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் அதிகாரிகள் மற்றும் பயிற்சி துறைக்கான செயலாளர் ராதா சவுகான் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் உடன் கலந்து கொண்டனர். இதன்பின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் துணை ஜனாதிபதி கலந்துரையாடினார்.

அதிகாரிகளுடனான சந்திப்பில் அவர் பேசும்போது, நீங்கள் அரசியல் சாசனத்தின் உயரிய விசுவாசத்திற்கு உட்பட்டு பணியாற்ற கூடிய நிலையில் கடன்பட்டு உள்ளீர்கள். நீங்கள் எப்போதும் அதனை பாதுகாக்க, கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் சாசனத்தின்கீழ் உத்தரவாதம் பெற்றுள்ள உரிமைகளையும் நீங்கள் நிலைநிறுத்த வேண்டும். ஒருவரின் கவனம் தன்மீது திரும்பும்படி ஈர்க்க செய்வதோ அல்லது அரசியல் பதவிகளை எடுத்து கொள்வதோ எல்லா நிலைகளிலும் தவிர்க்க வேண்டும் என கூறினார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடனுடனும், எந்த சூழலிலும் தங்களது பெயர் வெளியில் தெரியாத வகையில் பணியாற்ற அவர்கள் கற்று கொள்ள வேண்டும் என்றும் துணை ஜனாதிபதி அறிவுரை வழங்கி உள்ளார்.

1 More update

Next Story