காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக இருக்கும்: முன்னாள் மத்திய மந்திரி


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக இருக்கும்:  முன்னாள் மத்திய மந்திரி
x

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.500 ஆக இருக்கும் என காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி கூறியுள்ளார்.

விஜயவாடா,



காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி சிந்தா மோகன் இன்று கூறும்போது, பா.ஜ.க. ஆட்சியில் ஏழைகள், இன்னும் ஏழைகளாகவே உள்ளனர். நாட்டுக்கு அக்கட்சி எதுவும் செய்யவில்லை. சிறுத்தைகளை (சீட்டா) கொண்டு வருவது வளர்ச்சியா?

அவர்கள் சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் அம்பேத்காரின் படங்களை பயன்படுத்தி வருகின்றனர். வாஜ்பாய் மற்றும் அத்வானி உங்களது தலைவர்கள் இல்லையா? அவர்களை ஏன் பிரதமர் ஏற்று கொள்ளவில்லை? பிரதமர் மோடிக்காக நான் இரக்கப்படுகிறேன்.

ஏனெனில், கியாஸ் மற்றும் பெட்ரோல் விலைவாசி உயர்வுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 100 இடங்களிலேயே வெற்றி பெறும். ஜெகன் ஆந்திர பிரதேசத்தில் கல்வி முறையையே அழித்து விட்டார் என்றும் மோகன் கூறியுள்ளார்.

அவர் மத்திய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்து உள்ளதுடன், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.500-க்கு விற்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Next Story