மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை முதல்-மந்திரி சந்திக்காதது ஏன்? - டெல்லி மகளிர் ஆணையம் கேள்வி
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை முதல்-மந்திரி சந்திக்காதது ஏன்? எனடெல்லி மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.
இம்பால்,
மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவரிடம் அந்த பெண்கள், அரசு சார்பில் யாரும் தங்களை சந்திக்கவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய சுவாதி மலிவால், "முதல்-மந்திரி பைரன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களை அவர் ஏன் சந்திக்கவில்லை. நான் டெல்லியில் இருந்து வந்து அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) சந்திக்க முடியுமானால், அவரால் ஏன் முடியாது?" என கேள்வி எழுப்பி உள்ளார்.
Related Tags :
Next Story