ஆபாச படத்தில் நடிப்பீர்களா? என கேட்ட யூடியூபர்... நடிகை எடுத்த அதிரடி முடிவு...!


ஆபாச படத்தில் நடிப்பீர்களா? என கேட்ட யூடியூபர்... நடிகை எடுத்த அதிரடி முடிவு...!
x

நடிகையிடம் யூடியூபர் ஆபாசபடத்தில் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்டார்.

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகை துனிஷா குமெண்டா. இவர் கன்னடா சின்னத்திரையில் சீரியலில் நடித்து புகழ்பெற்றார். பின்னர், கன்னடாவில் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது பெண்டகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் வரும் 7ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், திரைப்பட புரோமஷனுக்காக பிரபல யூடியூபரான சுஷன் என்பவருக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின்போது யூடியூபர் சுஷன் நடிகை துனிஷாவிடம் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டார்.

யூடியூபர் சுஷன் நடிகை துனிஷாவிடம், நீங்கள் ஆபாச படங்களில் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்டார். அவரின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த துனிஷா, நான் ஒன்றும் ஆபாச பட நடிகையல்ல. ஏன் என்னிடம் இப்படிப்பட்ட கேள்வி கேட்டீர்கள்? இந்த கேள்வி கேட்பதற்கு முன் உங்களுக்கு அறிவு இருக்க வேண்டும். கன்னட திரைத்துறையில் யாரும் ஆபாசப்படம் நடிக்கவில்லை. நீங்கள் ஒரு நடிகையிடம் பேச்சிக்கொண்டிருக்கிறீர்கள்' என்று அதிரடியாக பேசினார். அவரின் பேச்சை தொடர்ந்து யூடியூபர் நேர்காணலை முடித்துக்கொண்டார்.

இந்நிலையில், ஆபாச படத்தில் நடிப்பீர்களா? என்று கேட்ட யூடியூபர் சுஷன் மீது நடிகை துனிஷா போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகையின் புகாரின் அடிப்படையில் சுஷன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story