ஜி-20 மாநாட்டில் இந்தியாவின் செய்தி வலுவாக எதிரொலித்தது - சர்வதேச நிதியம் நிர்வாகி புகழுரை


ஜி-20 மாநாட்டில் இந்தியாவின் செய்தி வலுவாக எதிரொலித்தது - சர்வதேச நிதியம் நிர்வாகி புகழுரை
x

ஜி-20 மாநாட்டில் இந்தியாவின் செய்தி வலுவாக எதிரொலித்ததாக சர்வதேச நிதியத்தின் நிர்வாகி புகழாரம் சூட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி ஜி-20 உச்சி மாநாட்டை, 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளில் இந்தியா நடத்தியது. இந்த செய்தி மாநாட்டில் வலுவாக எதிரொலித்ததாக சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'ஒரு வெற்றிகரமான ஜி-20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து பிரதிநிதிகள் மத்தியிலும் 'ஒரே பூமி, ஒரே குடும் பம், ஒரே எதிர்காலம்' என்ற இந்தியாவின் செய்தி வலுவாக எதிரொலித்தது' என புகழ்ந்து உள்ளார்.

கீதா கோபிநாத்தின் இந்த பாராட்டுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து இருந்தார்.


Next Story