திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! - 2 ஆண்டுகளுக்குப்பின் நடைபாதை திவ்ய தரிசன அனுமதி
2 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபாதை திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அலிப்பிரி நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கும் டோக்கன்களும் வழங்கப்பட்டு வந்தன.
கொரோனா தொற்று காரணமாக இந்த நடைமுறை நிறுத்தப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபாதை திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story