நண்பரின் மனைவியுடன் தகாத உறவு; குட்டு வெளியான அச்சத்தில் நண்பரை கொடூர கொலை செய்த விமான படை அதிகாரி
உத்தர பிரதேசத்தில் டாக்டரான நண்பரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த விவரம் வெளியான அச்சத்தில் நண்பரை விமான படை அதிகாரி கொடூர கொலை செய்து உள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரில் வசித்து வந்தவர் கவுரவ். டாக்டர் தொழில் செய்து வந்து உள்ளார். இவரது மனைவி பிரியங்கா. இந்நிலையில், கவுரவின் நண்பரான விமான படை அதிகாரி முதித் என்பவருக்கும், பிரியங்காவுக்கும் தகாத தொடர்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த விசயம் கவுரவுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்து உள்ளார். இந்நிலையில், ஆஹிர்வான் பகுதியில் நண்பர் முதித்தின் வீட்டுக்கு கவுரவ் சென்று உள்ளார். ஆனால், அதன்பின்னர் இரவு வரை கவுரவ் வீட்டுக்கு திரும்பவில்லை.
இதனால், அவரது மனைவி பிரயங்கா கணவரை காணாமல் தேட தொடங்கி உள்ளார். இதன்பின்பு சக்கேரி காவல் நிலையத்தில் தனது தாய் மாமா ரவீந்திர பிரதாப் உடன் பிரியங்கா சென்று போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இதுபற்றி போலீசார் சந்தேகத்தின்பேரில் முதித்திடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதில், பிரியங்கா உடனான முதித்தின் தகாத உறவு பற்றி கவுரவ் அறிந்து விட்டார் என தெரிந்ததும் அவரை கொலை செய்த விவரங்களை போலீசில் முதித் கூறியுள்ளார்.
முதலில் டாக்டரான தனது நண்பரை அரசு இல்லத்திற்கு முதித் அழைத்து சென்று உள்ளார். பின்னர் அவரை மதுபானம் குடிக்க வைத்து உள்ளார். போதை நிலையில் இருந்தபோது, நண்பரான கவுரவை துப்பாக்கியால் முதித் சுட்டு உள்ளார்.
அதன்பின்பு, கவுரவின் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பெரிய பொருளை தூக்கி போட்டு கொலை செய்து உள்ளார். அதன்பின்னர், உயிருடன் இருந்த கவுரவை சாலையில் போட்டு விட்டு, தப்பியோடி விட்டார்.
கவுரவ் தன்னை கொலை செய்து விடுவார் என்ற பயத்தில் முதில் இருந்து உள்ளார். இதனால், அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார் என போலீசில் தெரிவித்து உள்ளார்.