ஆகஸ்டு மாதத்தில் மட்டும் இந்தியாவில் 74 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை


ஆகஸ்டு மாதத்தில் மட்டும் இந்தியாவில் 74 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை
x

கோப்புப்படம்

ஆகஸ்டு மாதத்தில் மட்டும் இந்தியாவில் 74 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் எனும் சமூக வலைத்தள கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில், தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மாறாக இயங்கி வரும் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தடை செய்து வருகிறது. குறிப்பாக, பயனாளர் புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் தளம் மூலம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்தியாவில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டுமே 74 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்து உள்ளது. இதில் 35 லட்சத்துக்கு மேற்பட்ட கணக்குகளை பயனாளர்கள் ரிப்போர்ட் அனுப்புவதற்கு முன்னரே தடை செய்திருப்பதாக கூறியுள்ளது.


Next Story