மைனர் பெண் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை


மைனர் பெண் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
x

மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு் சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிவமொக்கா;l

மைனர் பெண் பலாத்காரம்

சிவமொக்கா அருகே ஆனவட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் அனுமந்தப்பா (வயது 45). தொழிலாளி. இதேபோல் அதே பகுதியில் 16 வயது மைனர் பெண் ஒருவா் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 31-ந்தேதி மைனர் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. அவரது பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். அப்போது மைனர் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த அனுமந்தப்பா, அவரை வற்புறுத்தி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.

கொலை மிரட்டல்

இதையடுத்து சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினால் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார். இதனால் பயந்து போன மைனர் பெண் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கதறி அழுதபடி கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மைனர் பெண்ணின் பெற்றோர், உடனடியாக சம்பவம் குறித்து ஆனவட்டி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அனுமந்தப்பாவை கைது செய்தனர்.

10 ஆண்டு சிறை

இதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர். பின்பு அவர் ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை சிவமொக்கா கோர்ட்டில் நடத்து வந்தது. மேலும் இதுகுறித்து அனுமந்தப்பாவின் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்றுமுன்தினம் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நீதிபதி மோகன் தீர்ப்பு வழங்கினார். அதில் மைனர் பெண்ணை, அனுமந்தப்பா பலாத்காரம் செய்தது நிரூபிக்கபட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story