கர்நாடகாவில் உள் அரங்குகளில் முக கவசம் அணிவது கட்டாயம்; அரசு அறிவிப்பு


கர்நாடகாவில் உள் அரங்குகளில் முக கவசம் அணிவது கட்டாயம்; அரசு அறிவிப்பு
x

கர்நாடகாவில் உள் அரங்குகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.



பெங்களூரு,


உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதேபோன்று அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய குடியரசு பகுதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசும் மத்திய சுகாதார மந்திரி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. நடத்தி தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனை முன்னிட்டு கர்நாடகாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், சுகாதார துறை உயரதிகாரிகள் மற்றும் கொரோனா தொழில்நுட்ப அறிவுறுத்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

இதன்பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதார மந்திரி சுதாகர் மாநிலத்தில் மூடிய பகுதிகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் உள் அரங்குகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என அரசு அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று, கர்நாடகாவில் விமான நிலையங்களில் வந்திறங்கும் சர்வதேச பயணிகளிடம் ரேண்டம் அடிப்படையில் 2 சதவீத பரிசோதனை செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

அரசிடம் இருந்து அடுத்த திருத்தியமைக்கப்பட்ட உத்தரவுகள் வரும் வரை இந்த நடவடிக்கையானது தொடரும் என்று சுகாதார மந்திரி கூறியுள்ளார். போதிய படுக்கைகள், ஆக்சிஜன் வினியோகத்துடன் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை திறக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story