மொலகால்மூரு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நடிகர் சுதீப் பிரசாரம்


மொலகால்மூரு தொகுதியில்  பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நடிகர் சுதீப் பிரசாரம்
x
தினத்தந்தி 26 April 2023 6:45 PM GMT (Updated: 26 April 2023 6:47 PM GMT)

மொலகால்மூரு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து நடிகர் சுதீப் பிரசாரம் செய்தார்.

சிக்கமகளூரு

சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தொகுதியில் பா.ஜனதா சார்பில் திப்பாரெட்டி போட்டியிடுகிறார். நேற்று அவரை ஆதரித்து நடிகர் சுதீப் பிரசாரம் செய்தார். அவர் திறந்த வாகனத்தில் பா.ஜனதா வேட்பாளருடன் ஊர்வலம் நடத்தினார்.

அப்போது திப்பாரெட்டிக்கு ஆதரவாகவும், பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும் அவர் பேசி வாக்கு சேகரித்தார். நடிகர் சுதீப்பை காண அங்கு ஏராளமானோர் திரண்டனர். அவரது ரசிகர்களும், பொதுமக்களும் முண்டியடித்தனர். முன்னதாக பா.ஜனதாவினர் நடிகர் சுதீப்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story