இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

Image Courtesy: PTI

Image Courtesy: PTI

பாதிப்பு நேற்று 1,223 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 1,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாதிப்பு நேற்று 1,223 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 389 பேர் குணமடைந்துள்ளனர்.

இதில் நேற்று குணமான 2,252 பேர் அடங்குவர். தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை நேற்றைவிட 983 குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 15,515 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று பஞ்சாபில் 2 பேர், மேற்கு வங்கத்தில் ஒருவர் என 3 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 770 ஆக உயர்ந்துள்ளது.


Next Story