கொரோனா அதிகரிப்பு - பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை...!


கொரோனா அதிகரிப்பு - பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை...!
x

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் 1000ஐ தாண்டி பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணி அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ள நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்த உள்ளார்.

1 More update

Next Story