சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய சுகாரதார மந்திரி தலைமையில் ஆலோசனை


சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய சுகாரதார மந்திரி தலைமையில் ஆலோசனை
x

கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது.

இதனையடுத்து, கொரோனா பரவல் தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் அவசர ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், கொரோனா பரவல் தொடர்பாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story