கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு: இந்தியாவில் 4 ஆண்டுகளில் 200 புலிகள் அதிகரிப்பு


கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு: இந்தியாவில் 4 ஆண்டுகளில் 200 புலிகள் அதிகரிப்பு
x

இந்தியாவில் 4 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரு,

மைசூரு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த புலிகள் திட்டத்தின் 50-ம் ஆண்டு பொன் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவர் கடந்த 2022-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார். மேலும் அவர் அடுத்த 25 ஆண்டு காலத்திற்கான அறிக்கையையும் வெளியிட்டார்.

அதில் நமது நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு 1,41 புலிகளும், 2010-ம் ஆண்டு 1,706 புலிகளும், 2014-ம் ஆண்டு 2,226 புலிகளும், 2018-ம் ஆண்டு 2,967 புலிகளும் இருந்தன.

கடந்த 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பு அறிக்கையில் புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 200 புலிகள் அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


Next Story