உலகம் ஒரு குடும்பம் அதை ஆள இந்தியா விரும்பவில்லை - ராஜ்நாத் சிங் பேச்சு


உலகம் ஒரு குடும்பம் அதை ஆள இந்தியா விரும்பவில்லை - ராஜ்நாத் சிங் பேச்சு
x

Image Courtesy : PTI 

செயற்கை நுண்ணறிவு குறித்த புதினின் உரையை மேற்கோள் காட்டி ராஜ்நாத் சிங் பேசினார்.

புதுடெல்லி,

உலகை ஆள இந்தியா விரும்பவில்லை என பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ராஜ்நாத் சிங் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி குறித்து பேசினார். அப்போது அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உரையை மேற்கோள் காட்டி பேசினார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது :

ரஷியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. செயற்கை நுண்ணறிவு துறையில் யார் சிறந்து விளங்குகிறாரோ , அவர் உலகையே ஆள்வார் என ரஷிய அதிபர் கூறி இருந்தார். இன்றைய காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவு பெரிதாக வளர்ந்து வருகிறது.

அந்த உண்மையை மறுக்க முடியாது. இருப்பினும், உலகம் ஒரு குடும்பம் என்று இந்தியா நம்புவதால், உலகை ஆள நாங்கள் விரும்பவில்லை. மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் நாம் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்த வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story