ஏழைகளின் வளர்ச்சியின் மூலம்தான் இந்தியா வளர்ந்த நாடாக முடியும்: அமித்ஷா


ஏழைகளின் வளர்ச்சியின் மூலம்தான் இந்தியா வளர்ந்த நாடாக முடியும்: அமித்ஷா
x

வளர்ச்சிப் பயணத்தில் நாட்டில் உள்ள எந்த ஏழையும் விடுபடக்கூடாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார்.

புதுடெல்லி,

விக்சித் பாரத் சங்கல்ஃப் யாத்திரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களின் பலன்கள் இலக்கு வைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் அரசின் முதன்மைத் திட்டங்களை நிறைவு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், விக்சித் பாரத் சங்கல்ஃப் யாத்திரை 2047-ஆம் ஆண்டுக்குள் சுயசார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான இயக்கம் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சந்துவாவ் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை(நேற்று) மாலை விக்சித் பாரத் சங்கல்ஃப் யாத்திரை நிகழ்ச்சியில் கிராம மக்களிடம் அவர் உரையாற்றினார். அப்போது, மத்திய அரசின் அனைத்து நலத் திட்டங்களின் பலன்களும் கடைகோடி மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாகவும், வளர்ச்சிப் பயணத்தில் நாட்டில் உள்ள எந்த ஏழையும் விடுபடக்கூடாது என்றும் ஷா கூறினார்.

விக்சித் பாரத் சங்கல்ஃப் யாத்திரை மூலம், நாடு முழுவதும் உள்ள அரசாங்கத்தின் அனைத்து முதன்மைத் திட்டங்களையும் 100 சதவிகிதம் நிறைவு செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார். மேலும், தொழில் வளர்ச்சியில் ஏழைகளை விட்டுச் சென்றால் நாடு செழிப்பாக இருக்க முடியாது. ஏழைகளின் வளர்ச்சியின் மூலம்தான் இந்தியா வளர்ந்த நாடாகும் இலக்கை அடைய முடியும் என்று அமித்ஷா கூறினார்.


Next Story