பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளர்கிறது - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை டுவீட்
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளர்கிறது என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. இன்றைய சிறப்பான சந்திப்புக்கு நன்றி. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருவதை பார்க்கிறேன். வருங்காலத்தில் இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியிலான நல்லுறவை எதிர்நோக்குகிறேன். வலிமையான நமது கூட்டு தொடர்வதை எதிர்பார்க்கிறேன். ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு தனது முழு ஆதரவு இருக்கும்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story