2047ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்த திட்டம் - மத்திய மந்திரி தகவல்


2047ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்த திட்டம் - மத்திய மந்திரி தகவல்
x

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்த திட்டம் உள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

டெல்லி,

உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி வித்யா பவனில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராம்மோகன் பேசியதாவது,

இந்தியாவில் தற்போது 157 விமான நிலையங்கள் உள்ளன. ஆனால், அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் 2047ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக மாறும்போது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் எண்ணிக்கை 350 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

2014ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 74 விமான நிலையங்கள் இருந்தன. அப்போது, வெளிநாடுகளை சேர்ந்த 4.60 கோடி பேர் இந்தியாவுக்கு வந்தனர். தற்போது 157 விமான நிலையங்கள் உள்ள நிலையில் 7 கோடி வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இதில் 35 சதவீதத்தினர் சுற்றுலா, விடுமுறைகளை கொண்டாட இந்தியாவுக்கு வந்துள்ளனர்' என்றார்.


Next Story