கனடாவில் நடந்த காலிஸ்தான் வாக்கெடுப்புக்கு இந்தியா எதிர்ப்பு


கனடாவில் நடந்த காலிஸ்தான் வாக்கெடுப்புக்கு இந்தியா எதிர்ப்பு
x

கோப்புப்படம்

கனடாவில் நடந்த காலிஸ்தான் வாக்கெடுப்புக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள், பஞ்சாபை தனிநாடாக அறிவிக்கக்கோரி, அங்கு 'காலிஸ்தான் வாக்கெடுப்பு' நடத்தின. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காலிஸ்தான் வாக்கெப்பு என்பது கேலிக்கூத்தான செயல். ஒரு நட்பு நாட்டில், பிரிவினை அமைப்புகளால் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் அனுமதிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.தூதரக வழிமுறைகள் மூலம் கனடா அரசிடம் இப்பிரச்சினையை எடுத்துச்சென்றுள்ளோம். தொடர்ந்து வலியுறுத்துவோம்.அதற்கு கனடா, இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் மதிப்பதாகவும், வாக்கெடுப்பை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்தது என்று அவர் கூறினார்.


Next Story